Sunday, July 13, 2025
28.4 C
Colombo
வடக்கு20 இலட்ச ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

20 இலட்ச ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

பாரியளவில் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

விசேட அதிரடிப்படை கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (08) அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெடித்தலதீவு பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாரியளவில் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 365 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 05 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles