Monday, April 21, 2025
32 C
Colombo
வடக்குயாழில் பேருந்து விபத்து: 6 பேர் காயம்

யாழில் பேருந்து விபத்து: 6 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விசாக பொங்கலில் பங்கேற்பதற்றகாக, யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்ட குறித்த பேருந்து சென்றுள்ளது.

பொங்கல் திருவிழாவை முடித்துக்கொண்டு, இன்று மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அதில் பேருந்தில் பயணித்த 06 பேர் காயமடைந்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles