தாம் அணிந்திருந்த ஆடை மட்டுமே மிஞ்சியதாகவும், வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் தாம் என்றும் நிமல் லன்சா எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்று (18) நாடாளுமன்றில் தனது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் அவர் உரையாற்றினார்.
இந்த வன்முறைச் செயல்களால் தனது தந்தை, தாத்தாவிடமிருந்து பெற்றதையும் தான் சம்பாதித்தவற்றையும் இழந்தாலும், தற்போது மனதை தேற்றிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் நாட்டை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல நண்பர்கள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், பிரபல ஹோட்டலொன்றின் தலைவர் தன்னை தனது விடுதியில் தங்குமாறு அழைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.