Tuesday, April 29, 2025
32 C
Colombo
வடக்குபுங்குடுதீவில் மனித எச்சங்கள் மீட்பு: அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

புங்குடுதீவில் மனித எச்சங்கள் மீட்பு: அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரச வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதீவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரச வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.

அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles