தனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை பந்துல குணவர்தன எம்.பி இன்று நாடாளுமன்றில் நினைவு கூர்ந்தார்.
நாடாளுமன்றில் அவர் ஆற்றிய உரை:
வீட்டுக்கு தீ வைக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தேன். 3 இலட்சம் மக்களுக்கு மேல் எனது அறிவை பகிர்ந்துள்ளேன்.
இந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாம் நடந்துக் கொண்டுள்ளோம். எம்.பிகளுக்கான வேதனத்தை பெற்றுக் கொண்டதில்லை. அதனை நன்கொடையாக வழங்குகிறேன்.
எனது பதவிக் காலத்தில் ஒருபோதும் நான் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசித்ததில்லை.
அத்துடன், நான் எனது வரிகளை முறையாக செலுத்தி வருகிறேன். அதற்கான பற்றுச்சீட்டுகளை சபையில் சமர்ப்பிக்க முடியும். நாட்டுக்கு கடன் இல்லாத பிரஜை நான்.
சிறுவர்களுக்காக 51 புத்தகங்களை எழுதியுள்ளேன். வீட்டிலிருந்து நூலகத்திற்கு தீ வைக்காதமை தொடர்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.