Thursday, January 16, 2025
24.2 C
Colombo
சினிமா'கூலி' டீசருக்கு எச்சரிக்கை விடுத்த இளையராஜா

‘கூலி’ டீசருக்கு எச்சரிக்கை விடுத்த இளையராஜா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இசைஞானி இளையராஜாவின் வா வா பக்கம் வா என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது.

இந்த நிலையில் தனது இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles