வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் உள்நுழைந்துள்ளார்.
இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார்.இதனையடுத்து குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளதுள்ளார்
குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.