இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன.
முன்னராக, இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தீா்ப்பை திகதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதனை தொடர்ந்து, இன்று நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூவரடங்கிய ஆயம் இன்று முற்பகல் குறித்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கி பேரறிவாளனை விடுதலை செய்தது.