சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான Followers ஐ வைத்திருந்த பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மதன் கார்த்தியின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், தளபதி விஜயின் குரலில் சில நாட்களுக்கு முன்னர் ‘கோட்’ திரைப்படத்திலிருந்து ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியானது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலப்பு விமர்சனம் பெற்ற நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலுக்கு சரியாக இசையமைக்கவில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து பல விஷயங்கள் இந்த பாடலில் பேசப்பட்டு இருந்தாலும் கூட இசை ரீதியாக அந்த பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்த சூழலில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் கடைசி பதிவிற்கு அதிக அளவில் நேர்மறையான விமர்சனங்களை வந்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.