பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெட்கமில்லாமல் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதாக ஆ யு சுமந்திரன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை இன்று விவாதித்து வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ரணில் வாக்களித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இந்த பிரேரணையை ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியதாகவும் இதன்போது குறித்த பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதாக அவர் உறுதி அளித்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது சொந்த கொள்கைகள் அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு பிரதமராகி ஆளும் தரப்பில் கூட ஆதரவு இல்லாத நிலையில் இருப்பதாக சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.