பொலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் நேற்று மாலை (15) குஜராத்தின் பூஜ் நகரில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் மும்பையில் உள்ள பொலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
சந்தேக நபர்கள் இருவரும் பிரபல பாதாள குழு தலைவரான லொரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்துக்கு பின்னர் சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் மும்பை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அவரிடம் கூறப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய விஷயத்தைத் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் சல்மான் கானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.