யாழ். சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக 16 வயதுடைய மாணவி ஒருவர் 08 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.