பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பின்தங்கிய பாடசாலைகள், மலையக பாடசாலைகள் மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 80,000 மாணவிகளுக்கு ஏப்ரல் முதல் ஆண்டுதோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.