ரயிலில் மோதி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டு கல்வி கற்கும் மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி இந்த மாணவன்உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தல்பிட்டிய வடக்கு வடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
குறித்த மாணவன் காதில் ஹெட்செட்டை போட்டுக் கொண்டு ரயில் பாதையில் பயணித்துள்ளதுடன், ரயில் வரும் சத்தம் கேட்காததால் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.