யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.
செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்காகியவராவார்.
உறவினர்களிடையே ஏற்பட்ட வன்முறையில் வாள்களுடன் சென்ற குழுவொன்று ஒருவரின் கையை துண்டாக்கியுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.