Monday, November 24, 2025
25 C
Colombo
மலையகம்நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது.

நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹனவிடகே டொன் நந்தசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது மனைனவியுடன் நுவரெலியாவில் தலைமறைவாக இருந்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர், சிறிது காலம் இந்தியாவில் தலைமறைவாக இருந்துள்ளார்.

அண்மையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட 09 கிலோ கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் இவர் மூலமே இலங்கைக்குள் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles