Saturday, May 10, 2025
29 C
Colombo
மலையகம்தேயிலை செடிகளுக்குள் புகுந்த கார்

தேயிலை செடிகளுக்குள் புகுந்த கார்

அதிவேகமாக பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், இன்று (25) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த கார், வீதியை கடக்க முயன்ற நாயை காப்பாற்ற முற்பட்டதில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை செடிகளுக்குள் சென்றுள்ளது.

விபத்தின் போது, ​​காரில் நான்கு பேர் இருந்துள்ளதுடன், தெய்வாதீனமாக அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles