நாட்டின் பொருளாதார மீட்சிக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்கின்ற முக்கியமான தீர்மானங்கள் அனைத்துக்கும் பூரண ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எனினும் கட்சியின் கொள்கைகளை மீறி ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளை, அரசாங்கத்துடன் இணைத்து பதவிகளை வழங்க முற்பட்டால், அரசுக்கு வழங்கும் ஆதரவு முழுமையாக நீக்கப்படும் என SJB எச்சரித்துள்ளது.