Monday, April 21, 2025
31 C
Colombo
வடக்குவவுனியாவில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்ததுடன், அந்த வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles