நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுக்கும் அனைத்து சரியான தீர்மானங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கப் பதவிகளை ஏற்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.