‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் மூலம் அவர் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின.
ஊட்டியில் மீதாவின் சொந்த ஊரில் அவரது நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பெற்றோர் பார்த்து நிச்சயித்துள்ள மாப்பிள்ளையை மீதா திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மீதா ரகுநாத்தின் திருமணம் சத்தமின்றி நேற்று நெருங்கியவர்கள் சூழ நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியானது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் இணைந்திருக்கும் திருமணப் புகைப்படங்களைப் அவர் பகிர்ந்துள்ளார்.