Thursday, April 23, 2026
26.1 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் புஷ்பராஜ் என்ற 34 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles