Monday, December 22, 2025
27.8 C
Colombo
அரசியல்நான் அனைத்தையும் சரி செய்வேன் - ரணில்

நான் அனைத்தையும் சரி செய்வேன் – ரணில்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியில் இருந்த முக்கியமான சில விடயங்கள் பின்வருமாறு,

நாட்டின் பொருளாதாரம், மேலும் தீவிர நெருக்கடியை சந்தித்த பின்னரே சீரடையும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக சொல்லி போராடும் மக்களின் உணர்வுகளுடன் நான் ஒத்து போகிறேன் – ஆனால் அது நடக்காது.
குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருப்பது செயல்வடிவத்தை பெறாது.
நான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கவே பதவியேற்றுள்ளேன்.
நாட்டு மக்களுக்கு கட்டாயமாக 3 வேளையும் நான் உணவு கொடுப்பேன்.
நாட்டின் பொருளாதாரம் உடைந்துவிட்டது.
மக்களுக்கு நான் சொல்லும் செய்தி – ‘பொறுமையாக இருங்கள், நான் அனைத்தையும் திரும்ப கொண்டு வருவேன்’.

#BBC

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles