Tuesday, March 18, 2025
26 C
Colombo
வடக்குயாழ்.பல்கலைக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

யாழ்.பல்கலைக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்தார்.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அதன் போது, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் உட்பட கல்வித் துறையில் கூட்டுத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles