Saturday, September 21, 2024
31 C
Colombo
வடக்குயாழில் மீனவர்கள் போராட்டம்

யாழில் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றனர். இதன் போது இந்திய துணை தூதரகத்திற்கு செல்லும் வழியில் பொலிஸார் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூதரகம் முன்பாக பேரணியை செல்லவிடாது வரியல் போட்டு பொலிஸார் இடைமறித்ததுடன் மீனவ அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கினர். இதற்கமைய தூதரகத்திற்குள் சென்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங.கிய மகைரொன்றையும் கையளித்தனர்.

இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகாரர்கள் இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை – இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இந்த நாட்டில் வாழுகி்ன்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய மீனவர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பிய மீனவர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles