மன்னார் – மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் (3) நள்ளிரவு மடு தேவாலயம் – மடு ரோட் சந்தி வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு அவர்களால் வெட்டப்பட்ட மரத்தின் குற்றிகளை மர்ம நபர்கள் ஏற்றி சென்ற நிலையில் கிளைகள் வீதியிலேயே போடப்பட்டுள்ளது.
இதனால் இன்று (04) காலை குறித்த வீதியில் வாகனங்கள் பயணிக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மடு தேவாலயத்திற்கு சில கிலோ மீற்றர் தூரத்தில் வீதி ஓரம் வளர்ந்திருக்கும் பெறுமதியான தேக்கு மரங்கள் இவ்வாறு பல தடவைகள் மர்ம நபர்களால் வெட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.