Tuesday, April 21, 2026
24.5 C
Colombo
வடக்குரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட பெண் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில், புதூர் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, பெண்ணின் சடலம் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவத்தில் 45 – 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles