மலையகம்மின் கம்பியில்  சிக்கி ஒருவர் பலி

மின் கம்பியில்  சிக்கி ஒருவர் பலி

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் தோட்ட பிரிவான கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (28) உயிரிழந்துள்ளார்.

காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம் செய்துவரும் அவர், காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்டவிரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின் கம்பியில்  சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பட்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles