புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனம் சட்டப் பேரவையில் அங்கீகரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும், 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்ததாகவும், முடிவெடுக்க குறைந்தது 5 வாக்குகள் தேவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.