மாத்தறையிலிருந்து நுவரெலியா ஊடாக சிவனொளிபாதமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று ரதல்ல பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் சென்ற 7 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.