Sunday, March 15, 2026
28 C
Colombo
வடக்குகட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கிய மர்ம பொருள்

கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கிய மர்ம பொருள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று (22) காலை கரையொதுங்கியுள்ளது.

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.

இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவர முயன்றதுடன், மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் பணியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles