Friday, November 15, 2024
24 C
Colombo
வடக்குபலாலி கிழக்கில் உள்ள பல காணிகளை விடுவிக்க நடவடிக்கை

பலாலி கிழக்கில் உள்ள பல காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் ,தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடித பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து, காணி விடுவிப்புக்கான அளவீட்டு பணிகள் உள்ளிட்ட இதர பணிகளை முன்னெடுக்கும்.

அதனை அடுத்து காணிகளை விடுத்து உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles