தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் வழியூடாக பயணிக்கும் பேருந்தில் அதிக நெரிசல்
காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கிளாரண்டன் பிரதேத்தில் இருந்து நானுஓயா நாவலர் பாடசாலை, நுவாரெலியா நல்லாறி மகளிர் கல்லூரி, நம்மாதா பாடசாலை, மற்றும் பரிசுத்த திரித்துவ கல்லூரி ஆகிய பாடசாலை செல்லும் மாணவர்கள்
நேர தாமதமாக பாடசாலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் சிலர் நடைபயணம் மூலம் பாடசாலை செல்கின்றனர் இதனால் பெற்றோர்கள் அசோகரியத்தை எதிர்நோக்குவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி வைத்தியசாலை செல்பவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் தொழிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவாதாகவும் போக்குவரத்து வீதியில் போதிய பேருந்து சேவைகள் விஸ்தரிக்க பட வேண்டும் எனவும் அப்பகுதி பிரதேசவாசிகள் கோரிக்கையுடன் குற்றம்சாற்றுகின்றனர்.
இதற்கு உரிய தீர்வினை பெற்றுதருமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.