பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 துப்பாக்கி, கொஸ்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவினர் இதனை உறுதிப்படுத்தினர்.
அத்துடன், பாதாள உலக உறுப்பினரான ‘கொஸ்கொட சுஜி’யின் சீடரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.