Thursday, January 16, 2025
26 C
Colombo
மலையகம்மகன்கள் மீது கொடூர தாக்குதல் - தந்தை கைது

மகன்கள் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

கொட்டகலை – பத்தனை பகுதியில் தமது இரு மகன்களை கடுமையாக தாக்கி, கொடுமைப்படுத்திய தந்தையொருவர் லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகளுக்காக தற்போது திம்புள்ளை – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இரு சிறார்களின் தாய் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்தனை பகுதியில் உள்ள தமது தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே குறித்த சிறுவர்கள் வளர்ந்து வந்துள்ளனர்.

அத்துடன், மது அருந்திவிட்டுவந்து தமது மருமகன், பேரக்குழந்தைகளை கொடுமைப்படுத்திவருவதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் தாத்தா தெரிவித்தார்.

தமது மகன்களை தாக்கி கடுமையாக தாக்கி அதனை ஒளிப்பதிவு செய்து வெளிநாட்டில் இருக்கும் மனைவிக்கு சந்தேக நபர் அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles