மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
அவர் இன்று அதிகாலை அலரி மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நாட்டை விட்டு வெளியேற தயாராக வருவதாக செய்திகள் வெளியானது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
“நாம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக பல வதந்திகள் பரவி வருகிறது. நாம் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்.
அத்துடன், எனது தந்தை மிக பாதுகாப்பாக உள்ளார். அவர் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.