புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட பிரபல நடிகை பூனம் பாண்டே தான் இறக்கவில்லை உயிரோடு தான் இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வௌியிட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார்.
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கிண்ண போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே.
தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.
மேலும் தன் சமூக வலைதளப் பக்கத்திலும் ரசிகர்களுடன் உரையாடியும், புகைப்படங்கள் பகிர்ந்தும் ஆக்டிவ்வாக வலம் வந்தார்.
சர்ச்சைக்குரிய நடிகையாக பொலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே, கடந்த 2 தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வௌியாகி இருந்தன.
கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சற்றுமுன்னர் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ள அவர் தான் உயிருடன் இருப்பதாகவும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.