Saturday, August 30, 2025
29.5 C
Colombo
வடக்குவவுனியாவில் நடைபாதை வர்த்தக நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

வவுனியாவில் நடைபாதை வர்த்தக நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் பாதசாரிகள் பிரதான வீதியால் நடந்து செல்லவேண்டியுள்ளதுடன், இது தொடர்பில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சந்தைசுற்றுவட்ட வீதிக்கு இன்றையதினம் சென்ற வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிசார் நடைபாதை வியாபாரநிலையங்களை அகற்றியதுடன், அவர்களது பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles