Monday, June 22, 2026
25.6 C
Colombo
அரசியல்ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பு தயாராகும் மொட்டுக் கட்சி

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பு தயாராகும் மொட்டுக் கட்சி

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து தமது கட்சியுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles