Saturday, July 26, 2025
26.7 C
Colombo
அரசியல்"நான் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் தீக்கிரையாகிவிட்டன"

“நான் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் தீக்கிரையாகிவிட்டன”

நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தனது வீடு எரிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது,

நான் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை.

இரவும் பகலும் உறங்காமல் அறிவைப் பகிர்ந்து கொண்டு சேகரித்த சொத்துக்கள் இப்போது தீக்கிரையாகியுள்ளது.

இனி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

குணபால ரத்னசேகர பல்கலைக்கழக பேராசிரியரான அவர் பொதுஜன பெரமுன சார்பில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவந்த அவர், கடந்த வாரம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் எரிந்து விட்டது! - வாழ்நாளில் அரசியல் வரமாட்டேன்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles