வடக்குசுதந்திரபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறிய பட்டா ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியினை கைது செய்துள்ளனர். விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles