Tuesday, May 27, 2025
29 C
Colombo
வடக்குநயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.

நாளை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் கோபுரங்கள், தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து நேற்று காலை 07 மணி முதல், இன்றைய தினம் மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் போது பல்லாயிரக்கனக்காண அடியவர்கள் எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்து கொண்டு, ஆலய விக்கிரகங்களுக்கு, எண்ணெய் காப்பு சாத்தி வழிப்பட்டனர்.

இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள, கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள், சுகாதார வசதிகள் என்பன செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles