Friday, April 17, 2026
26.7 C
Colombo
வடக்குமுல்லைத்தீவில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கி உள்ளது. குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது. இதில் உள்ள கான்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.

குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொலிசார் சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்து சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் குறித்த சடலமானது இராணுவத்தினரின் முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles