முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இன்று (19) காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த உடலுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலத்தை மீன்பிடி படகு வீசியிருக்கலாம் எனவும், சடலம் இந்திய மீனவரின் சடலமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.