யாழ்ப்பாணம், உடுவில் – மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் – மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மல்வம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 5 1/2 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டன.
இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.