Friday, September 20, 2024
31 C
Colombo
வடக்குமன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று மாலை உத்தரவிட்டார்.

இலங்கையின் தென் கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று மன்னார் கடற்படையினரால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 18 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Keep exploring...

Related Articles