பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வவுனியா, குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
குறித்த பூஜை வழிபாடுகள் பொலிசாரின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்றது.
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமாகிய யுக்திய நடவடிக்கை பொலிஸாரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தி அடைந்துள்ளது. இந்நிலையில் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வவுனியா, குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட பூஜை வழிபாட்டில் வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுவாராச்சி, தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி, பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமுதாயப் பொலிஸ் குழுவினர், சிவில் பாதுகாப்பு குழுவினர் என பலரும் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.