நேற்று (14) குருணாகல் பிரிவு 04 க்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ4 தாள் பொதியொன்றை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சேவையை இடைநிறுத்தியுள்ளார்.
பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவருக்கு இந்த சேவை இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 02 ஆம் திகதி காலை குருணாகல் – கொழும்பு வீதியில் பொல்கஹவெல பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இலக்கத் தகடு விளக்கு இல்லாமல் வாகனம் ஓட்டியதாகக் கூறி பொலிஸார் கார் ஒன்றை நிறுத்தி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, ஓட்டுநர் உரிமத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், காரில் இருந்த பழுதை சரி செய்யுமாறு தெரிவித்தனர்.
குருணாகல் – உடவல்பொல பிரதேசத்தை சேர்ந்த சாரதி தனது வாகனத்தின் பழுதை சரிசெய்து கொண்டு நேற்று (14) மாலை பொல்கஹாவெல பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தின் தவறு சரி செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்யாமல், சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க வழங்க ஏ4 தாள்களை கொண்டு வருமாறு கூறினார்.
இதனையடுத்து குறித்த நபர் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் குருநாகல் பிரிவு இலக்கம் 04க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.