Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஸ்டர் பெறாத பெற்றோரது சிறு குழந்தைகளுக்கே கொவிட்

பூஸ்டர் பெறாத பெற்றோரது சிறு குழந்தைகளுக்கே கொவிட்

March 1, 2022 – 1:20pm

கொழும்பு சிறுவர் வைத்தியசாலை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெரும்பாலான சிறுவர்களின் பெற்றோர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெருமளவிலான சிறுவர்களின் பெற்றோரும் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேற்படி வைத்தியசாலையில் தொடர்ந்து முப்பது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இத்தகைய நிலையில் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு தாம் அத்தகைய பெற்றோர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்  

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் மூலம் பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றுவது அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான பெற்றோர்களில் சிலர் ஒரு தடுப்பூசியையாயினும் இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

அவர்கள் ஏன் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என அவர்களிடம் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்   மேற்படி வைத்திய சாலையில் 3வார்டுகளில் சிறுவர்கள் தங்கியிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

 

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles