Tuesday, April 29, 2025
26 C
Colombo
வடக்கு37 வருடங்களின் பின் மீளுருவான ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம்

37 வருடங்களின் பின் மீளுருவான ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீள் உருவாகியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்றைய தினம் நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

அதன் போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் தலைவராக ஏக மனதாக தெரிவானார்.

அதனை தொடர்ந்து ஏனைய நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.

உள்நாட்டு யுத்தம் காரணமாக ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் செயலிழந்து காணப்பட்ட நிலையில் 37 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் மீள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles